சிறீலங்கா சுதந்திரக் கட்சி யாரையும் பணம் கொடுத்து வாங்க முயலவும் இல்லை. கட்சி தாவுபவர்களை தடுப்பதற்காக அரசாங்கம் பணம் கொடுக்கவும் இல்லை என்று அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க 100 மில்லியன் ரூபா பெறுமதியானவர் தானா? என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நவீன் திஸாநாயக்க அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதை தடுப்பதற்காக 100 மில்லியன் இலஞ்சம் வழங்க முற்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “இவ்வளவு பெரும் தொகை பணம் கொடுப்பதற்கு எமது கட்சியில் பணம் கிடையாது. அரசாங்கத்துடன் இருக்கும் வரை எமது கட்சி சிறந்தது, கட்சி தாவிய பின்னர் விமர்சிக்கின்றனர். இது நேர்மையான அரசியலுக்கு உகந்ததல்ல” என்றுள்ளார்.

0 Responses to யாரையும் பணம் கொடுத்து தக்க வைக்கும் தேவை அரசாங்கத்துக்கு இல்லை: அனுர பிரியதர்சன யாப்பா