சந்திரிக்கா குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, எதிரிணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் கூட்டுத் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாட்டை பிளவுபடுத்துவதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டார். சுனாமியை சாதகமாக வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவும் விடுதலைப் புலிகளுக்கு நிவாரணங்களையும், பல உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிலையில் மீண்டும் நாட்டை பாதாளத்தில் தள்ளுவதற்கு முயற்சிக்கின்றனர். எனவே, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரின் கூட்டு தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதை பார்த்தால், சந்திரிக்கா குமாரதுங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும். எனவே செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவர்கள் தெரியப்படுத்த வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to சந்திரிக்கா, ரணில், மைத்திரி கூட்டுத் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்: விமல் வீரவங்ச