ஐாதிக ஹெல உறுமயவின் பிரதி பொதுச்செயலாளரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான உதய கம்மன்பில மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தோடு இணைந்து கொண்டுள்ளார்.
இதனூடு, ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்த ஜாதிக ஹெல உறுமய அண்மையில் அதிலிருந்து விலகி பொது எதிரணிப் பக்கம் சென்றது. அத்தோடு, பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவோடு ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டு அவருக்கு ஆதரவளிக்கவும் தீர்மானித்தது.
இந்த நிலையிலேயே, உதய கம்மன்பில இன்று வியாழக்கிழமை மீண்டும் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டுள்ளார். ஏற்கனவே ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினரான எல்லாவல மேதானந்த தேரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to உதய கம்மன்பில மீண்டும் தாவினார்; அரசிலிருந்து எதிரணி சென்று மீண்டார்!