ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடும் என்று தெரிகிறது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்கின்றது என்கிற தன்னுடைய நிலைப்பாட்டினை இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கு இடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை நாளை செவ்வாய்க்கிழமை இரா.சம்பந்தன் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் முடிவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும், வடக்கில் பொது எதிரணி ஏற்பாடு செய்துள்ள தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளாது என்றும் தெரிகிறது.

0 Responses to மைத்திரியை ஆதரிக்கும் முடிவை த.தே.கூ நாளை வெளியிடும்?