Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று ஞாயிற்றுக் கிழமை காணாமல் போன மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர் ஏசிய விமானம் இந்தோனேசிய கடல்பரப்பில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

162 பயணிகளுடன் இந்தோனேசிய நகரான சுரபயாவிலிருந்து சிங்கப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த ஏர் ஏசிய விமானமான A320-200, மோசமான காலநிலை காரணமாக தனது பாதையை மாற்ற முடிவெடுத்த சிறிது நேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டிருந்தது.

எனினும் விமானம் கட்டுப்பாட்டை இழந்ததாக எந்தவொரு சமிக்ஞையையும் விமானம் வெளியிடவில்லை. ஆனால் விமானம் கடலில் வீழ்ந்திருக்கவே வாய்ப்புக்கள் அதிகம் என இந்தோனேசிய மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

விமானத்தை மீட்பதற்கு ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளும் உதவி செய்ய முன்வந்துள்ளதுடன் தமது மீட்புக் கப்பல் சிலவற்றை இந்தோனேசியா கடற்பரப்பிற்கு அனுப்பியுள்ளன.

குறித்த இந்தோனேசிய ஏர் ஏசியாவின் 49% வீத பங்குகளை மலேசிய ஏர் ஏசிய விமானமே கொண்டுள்ளது.

கடந்த மார்ச் 8ம் திகதி மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான MH370 விமானம் கோலாலம்பூரிலிருந்து பீஜிங் சென்ற வழியில் 239 பேருடன் மாயமாகியிருந்தது. அதற்கு என்ன நேர்ந்தது என இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த ஜூலை 17ம் திகதி மலேசிய ஏர்லைன்ஸுக்கு சொந்தமான MH17 எனும் விமானம் உக்ரேய்னுக்கு மேலாக பறந்து வந்து கொண்டிருந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டதில் அதில் பயணித்த 298 பேர் பலியாகியிருந்தனர். தற்போது பிரிதொரு மலேசிய விமானம் இந்தோனேசிய கடற்பரப்பில் காணாமல் போயுள்ளது. குறித்த 2014 வருடன் மலேசிய விமானங்களுக்கு மிகுந்த துரதிஷ்ட வசமான வருடமாக மாறிப் போயுள்ளது. அதோடு தற்போது ஏர் ஏசிய விமான நிலையத்தின் பங்குகளும் சந்தையில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளன.

0 Responses to நேற்று காணமால் போன ஏர் ஏசிய விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியிருக்கலாம் என மீட்பு படையினர் சந்தேகம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com