நேற்று மாநிலங்களவையில் பாஜக எம்பி மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்ஷேவை தேச பக்தர் என்று பாராட்டிப் பேசினார். இதற்கு இன்று அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
நேற்று மாநிலங்களவையில் சாக்ஷி மகராஜ் எம்பி கோட்ஷேவை தேச பக்தர் என்று கூறியதால் அவையில் பெரும் அமளி நிலவியது. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மக்களவையிலும் அந்த பிரச்சனை எதிரொலித்து, மக்களவையிலும் பெரும் அமளி நிலவி, 10 நிமிடங்களுக்கு ஒருமுறை அவைகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறியபோதும் அமளி நின்றபாடில்லை.
இதற்கிடையில் சாக்ஷி மகராஜ், தாம் பேசியது தவறு என்றும், தாம் எந்தவித உள்நோக்கத்துடனும் அதைக் கூறவில்லை என்றும் கூறியதோடு, தமது இந்த பேச்சை மன்னித்து மறைந்துவிடும்படிக் கேட்டுக்கொண்டார். இருப்பினும் இரண்டு அவைகளிலும் அமளி இன்னமும் ஓய்ந்தபாடில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to கோட்சேவை தேச பக்தர் என்று கூறிய எம்பி சாக்ஷி மகாராஜ் மன்னிப்பு கேட்டார்!