Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திருப்பூரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் இணைந்து சூப்பர் ஸ்டார் மக்கள் கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ளனர். இதற்கான கொடி, சின்னம் என்பவற்றையும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த 1990ம் ஆண்டிலிருந்து திருப்பூரில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக எஸ்.எஸ்.முருகேஷ் என்பவர் செயற்பட்டு வருகிறார்.

இச்சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நேற்று திருப்பூரில் நடந்த போது சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது என முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் இந்த கட்சியில் ரஜினிகாந்தின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்துவது இல்லை என்றும், ரஜினிகாந்தின் பெயருக்கு எந்த வகையிலும் களங்கம் ஏற்படுத்தாமல் செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளராக எஸ்.எஸ்.முருகேஷ் நியமிக்கப்பட்டார். கட்சியின் கொடியை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.முருகேஷ் வெளியிட்டார். நீலம், வெள்ளை, சிவப்பு நிற கொடியின் மத்தியில் நட்சத்திரம் இடம் பெற்றுள்ளது. இதில் காந்திஜி, நேதாஜி, பெரியார், காமராஜர் படம் அச்சிடப்பட்டு உள்ளது.

ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உண்மையாக உழைப்போம். ஒவ்வொரு மனிதனும் தனது பொருளாதாரத்தை உயர்த்தி அதன்பிறகு கட்சிக்கு பணியாற்றுங்கள் என்று கூறி வருகிறோம். விரைவில் எங்கள் புதிய கட்சியின் மாநில செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்படுவார்கள். அதை தொடர்ந்து செயற்குழு, பொதுக்குழு கூடி, 32 மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர். பின்னர் கோவை அல்லது மதுரையில் மாநில மாநாடு நடத்த உள்ளோம். மற்ற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டி முடிவு செய்யும் என்கிறார் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.முருகேஷ்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் திரைக்கு வந்த ரஜினிகாந்த்தின் லிங்கா திரைப்படமும் அரசியல் பின்னணியைக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய அரசியல் கட்சியைத் தொடக்கிய ரஜினி ரசிகர்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com