Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மஹிந்த ராஜபக்ஷவே இந்த யுகத்தில் தேர்வு செய்யப்பட்ட மிக மோசமான ஜனாதிபதி என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவின் கொத்மலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். யுத்த வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்த சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டார். இது தான் யுத்த வெற்றிக்காக அவருக்கு கிடைத்த பரிசு.

அலரிமாளிகையில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் புதுக்கடை நீதிமன்றங்களின் தீர்ப்புகள் மாற்றி அமைக்கப்படுகின்றன. இந்த நாட்டின் சட்ட ஒழுங்கு சீர்குலைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

நாட்டில் அபிவிருத்தி என்ற போர்வையில் கொள்ளை நடைபெறுகின்றது. இதுதான் உண்மை. இன்று பெருந்தோட்ட மக்கள் படுகின்ற சிரமத்தையும் எம்மால் நன்கு உணர்ந்துகொள்ள முடியும். யாழ்ப்பாணத்திற்கு சென்ற யாழ்தேவியில் ஒரு கிலோ மீற்றருக்காக 44 மில்லியன் ரூபா செலவு செய்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பின்பு அந்தத் தொகையை மாற்றி கிலோமீற்றர் ஒன்றுக்கான செலவாக 340 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அந்த ரயில் பாதை அமைக்கப்பட்டது.

இதுதான் மஹிந்த ராஜபக்ஷவின் அபிவிருத்தி. அபிவிருத்தி என்ற பெயரில் இவ்வாறு பலகோடி ரூபாய் கொள்ளையடிக்கப்படுகின்றது. இதனைத் தடுத்துநிறுத்த வேண்டுமானால் புதிய அரசு ஒன்று அமையவேண்டும். அதற்காகவே பல எதிர்க்கட்சிகள் கட்சிகள் ஒன்றுசேர்ந்து இந்தத் தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.

இந்த நாட்டின் தலைவிதியை மாற்றி புதிய ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமானால் நிச்சயமாக புதிய அரசு ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நாட்டு மக்கள் முன்வரவேண்டும். அதற்காக உங்கள் வாக்கைப் பயன்படுத்துங்கள்” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்தவே இந்த யுகத்தின் மிக மோசமான ஜனாதிபதி: மைத்திரிபால சிறிசேன

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com