Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், அண்மையில் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டவருமான திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சற்று முன்னர் (வியாழக்கிழமை) பதவியேற்றுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் சுகாதார அமைச்சராக பதவி வகித்த சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.

இந்த நிலையில், சுகாதார அமைச்சர் பதவி வெற்றிடமாகவே இருந்தது. அந்தப் பதவிக்கே திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

0 Responses to திஸ்ஸ அத்தநாயக்க சுகாதார அமைச்சராக பதவியேற்றார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com