மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்திலிருந்து நாங்கள் விலகிய நாள் முதல் அரசாங்கத் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
எவ்வளவு அச்சுறுத்தல் வந்தாலும் நாங்கள் எந்த காரணம் கொண்டும் மீண்டும் அரசாங்கத்தில் இணைய மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவிலுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நான் அரசாங்கத்தில் இருந்து வெளியில் வந்தமைக்கு முக்கிய காரணம் எமது பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பு தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படாமையே ஆகும்.
அரசாங்கத்தை விட்டு வெளியில் வந்த பின்பு எனக்கு பல தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனை நான் பெரிதாக நினைக்கவில்லை.
ஆனால் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 10.11 மணியளவில் எனக்கு அனாமதேய தொலைபேசி அழைப்பு ஒன்று அரசாங்க தரப்பில் இருந்து வந்தது. அதில் நாங்கள் மீண்டும் அரசாங்கத்துடன் இணையாவிட்டால் எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் குறிப்பாக எனது பிள்ளைகளுக்கும் சேறு பூசும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாகவும் எனவே கவனமாக நடந்து கொள்ளுமாறும் அதில் கூறப்பட்டது.
ஆனால், அந்த தொலைபேசி இலக்கத்தை என்னால் எனது தொலைபேசியில் பார்க்க முடியவில்லை. அதில் இலக்கத்துக்கு பதிலாக தனிப்பட்ட தொலைபேசி என குறிப்பிடப்பட்டிருந்தது.
நான் இது தொடர்பாக ஜக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடியுள்ளதோடு, தொடர்ந்து இந்த சம்பவம் இடம்பெறுமானால் இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளேன்.
நான் என்றுமே ஒரு விவசாயி அதனால் விவசாயத்தை செய்து கொண்டு எனது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே நான் அரசியலில் ஈடுபட்டுள்ளேன். எனக்கு அரசியலில் எந்தவிதமான ஒரு வருமானமும் தேவையில்லை. அப்படி நான் என்றுமே எதிர்பார்ப்பதில்லை.
நான் மக்களிடம் கேட்டுக் கொள்வது எதிர்காலத்தில் எனது அல்லது எனது குடும்பத்தார் தொடர்பாக ஏதாவது சேறு பூசும் வகையில் செய்தி அல்லது தகவல்கள் வெளிவந்தால் அதனை நம்ப வேண்டாம்.
நான் எனது மக்களுக்கு என்றும் விசுவாசமானவனாக நடந்து கொள்வேன். இவ்வாறான சேறு பூசப்படும் என்பதை நான் நன்கு அறிவேன். எனவே அதற்கு முகம் கொடுக்கவும் நான் தயாராகவே உள்ளேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அச்சுறுத்தல் விடுக்கின்றது: வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்