Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டாய மதமாற்றம் செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மம்தா பானர்ஜி, நமது தேசம் மதச்சார்பின்மை கொண்டது என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய மக்களுக்கு மத உரிமை என்பது உள்ளது, அவர்கள் விரும்பும் மதத்தில் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் கூறியுள்ளார்.

எனவே, மதவாதத்தை திணித்து கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் மதமாற்றம் என்பது அன்றாடம் நிகழும் ஒரு நிகழ்வாக தற்போது இருக்கிறது என்பது இவ்வேளையில் குறிப்பிடத்தக்கது.

0 Responses to கட்டாய மதமாற்றம் செய்தால் கடும் நடவடிக்கை: மம்தா பானர்ஜி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com