பாராளுமன்றத் தேர்தலொன்றை இப்போது நடத்தினால் தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது போகலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்தோடு, 100 நாட்கள் திட்டத்தை அமுல்படுத்த பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமானது. முன்னதாக இது புரியவில்லை. சில திட்டங்களை அமுல்படுத்த முயற்சித்த போதே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதற்தடைவையாக நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 127 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். பாராளுமன்றத் தேர்தலொன்றுக்கு செல்வது தற்போதைக்கு சிரமமான விடயமாக அமையும். பாராளுமன்றத் தேர்தலை நடத்தினால் 100 நாட்கள் திட்டத்தை 150 நாட்களில் கூட செய்ய முடியாமல் போய்விடும்.
புதிய பாராளுமன்றம் எவ்வாறு அமையும் என்பது பற்றிய ஊகங்களை வெளியிட முடியாது. எனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முழு ஒத்துழைப்புடன் 100 நாட்கள் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். 100 நாட்கள் திட்டத்தை எந்தவொரு காரணத்துக்காகவும் வீணடிக்க முடியாது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பினை நான் ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால், பாரியளவில் வன்முறைகள் வெடித்திருக்க வாய்ப்பு உண்டு.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இல்லத்தில் வைத்து பத்து நிமிடங்கள் சந்தித்து பேசினேன். அப்போது, கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள விருப்பமா?, என அவர் என்னிடம் கேட்டார். அதற்கு நான் “ஆம்“ என்று விருப்பம் தெரிவித்தேன். அவரது (மஹிந்த ராஜபக்ஷவின்) நிலைமை என்ன என அவர் வினவினார். அதற்கு மத்திய செயற்குழு கூடி தீர்மானிக்கும் என பதிலளித்தேன். பின்னர் தேனீர் அருந்தினோம். ஆனால், அப்பம் சாப்பிடவில்லை. தேர்தலின் பின்னர் கட்சி உறுப்பினர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களை நிறுத்துமாறு மஹிந்த ராஜபக்ஷ என்னிடம் கேட்டார்.
100 நாட்களுக்கு மட்டும் தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்காது. குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரையிலேனும் ஆட்சி நடத்தினால் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்த முடியும். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்படும் போது தேர்தல் நடத்தப்பட்டதா என்பது குறித்து தெரியாது. மிகவும் அமைதியான முறையில் நடத்தப்படும். வன்முறைகள் இருக்காது.
ஐக்கிய தேசியக் கட்சி அல்லது சுதந்திரக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய ஆட்சி நடத்தவில்லை. தேசிய அரசாங்க முறைமை ஒன்று பின்பற்றப்பட உள்ளது. தேர்தலில் எந்த மேடையில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி பின்னர் சிந்திப்போம். ஐக்கிய தேசியக் கட்சியினரும், சுதந்திரக் கட்சியினரும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தை வடக்கு- கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மட்டும் நிராகரிக்கவில்லை. பாரியளவில் சிங்கள பௌத்த மக்களும் நிராகரித்துள்ளனர். அதனாலேயே அவர்கள் எனக்கு வாக்களித்துள்ளனர். 2005 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதிக்கு காணப்பட்ட வாக்கு வங்கி இந்த தடவை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
எமக்கு உத்தியோகபூர்வ விமானங்கள் எதுவும் தேவையில்லை. என்னை, “அதி மேதகு, கௌரமிக்க, சேர்” என்றெல்லாம் அழைக்க வேண்டியதில்லை. எனது மனைவியை “பாரியார்” என அழைக்க வேண்டிய அவசியமில்லை. இது குறித்து பொதுமக்களுக்கும், அரச அதிகாரிகளுக்கும் விரைவில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அதீதமான அதிகாரங்கள் தேவையில்லை. அந்த அதிகாரங்கள் விரைவில் இரத்து செய்யப்படும்.” என்றுள்ளார்.
(ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிங்கள மொழியிலான செவ்வியின் தமிழாக்கம் குளோபல் தமிழ் செய்திகள் தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றது.)

0 Responses to பாராளுமன்றத் தேர்தலை இப்போது நடத்தினால், 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது: மைத்திரிபால சிறிசேன