யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகளில் 1000 ஏக்கர் எதிர்வரும் மூன்று கிழமைக்குள் விடுவிக்கப்பட்டு மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, வளலாய் பகுதியில் அரசாங்கம் அமைப்பதற்கு திட்டமிட்டிருந்த மாதிரிக் கிராம முயற்சியும் கைவிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் காலை 09.30 மணியளவில் வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.பலிஹக்கராவை ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அதன் பின்னர், வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக ஆளுநர், அரச அதிபர், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி, பிரதேச செயலாளர் உட்பட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தக் கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே மீள்குடியேற்றத்துறை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “வலிகாமம் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாக கலந்துரையாடி இருந்தோம். அதில் முதல் கட்டமாக உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள 1,300 ஏக்கர் காணியில் 1000 ஏக்கர் காணி முதல் கட்டமாக விடுவிக்கப்பட்டு அங்கு மக்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை, மூன்று கிழமை அவகாசத்துக்குள் செய்து முடிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது, அதனை துரிதமாக மேற்கொள்வதற்கு ஒரு செயற்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வலிகாமம் வடக்கு மக்களை வளலாய் பகுதியில் மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டு அங்கு குடியேற்றுவது குறித்து முன்மொழியப்பட்ட திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றவே முயற்சிகளை மேற்கொள்கின்றோம்.” என்றுள்ளார்.

0 Responses to வலி.வடக்கில் மூன்று கிழமைக்குள் 1000 ஏக்கர் காணியில் மீள்குடியேற்றம்: டி.எம்.சுவாமிநாதன்