Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அந்தக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன், உண்மைகள் கண்டறியப்படுவதன் ஊடாகவே தீர்வை எட்ட முடியும். எனவே, தற்போதுள்ள அரசு உண்மையைக் கண்டறிந்து, சர்வதேசத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டு நிரந்தர அரசியல் தீர்வை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா தலைமையிலான குழுவினருடனான நேற்றைய (வியாழக்கிழமை மாலை) சந்திப்பின் போதே இரா.சம்பந்தன் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென்னாபிரிக்காவின் அனுசரணையுடன் இங்கு முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க முயற்சிகளை நாம் வரவேற்கின்றோம். தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க இலங்கையின் புதிய அரசுடன் ஆக்கபூர்வமான - அர்த்தமுள்ள பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவுள்ளது. ஆனால், உண்மைகள் கண்டறியப்பட வேண்டும். இதற்கு தென்னாபிரிக்கா, இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் சர்வதேச விசாரணை அறிக்கையை தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள். உண்மைகள் வெளியில் வரவேண்டும் என்பதிலும். தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதிலும் தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர் என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசு, தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்பாடுகளை ஒத்த நடவடிக்கைகளை இங்கு முன்னெடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இதற்காக தென்னாபிரிக்காவின் துணை ஜனாதிபதி சிறில் ரமபோஷ அடுத்த மாதம் இலங்கைக்கு வருகை தந்து பேச்சுக்களை நடத்தவுள்ளார். இந்த நிலையில் அதற்கு முன்னோடியாக தென்னாபிரிக்க வெளிவிவகார பிரதி அமைச்சர் நொமைண்டியா தலைமையிலான குழுவினர் கொழும்புக்கு நேற்றுமுன்தினம் வருகை தந்து சந்திப்புக்களை நடத்தி வருகின்றனர்.

0 Responses to உண்மைகளைக் கண்டறிவதன் மூலமே நிரந்தரமான அரசியல் தீர்வினைக் காண முடியும்: சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com