Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் 26ஆம் திகதி செல்லவுள்ளார்.

சீன ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான பிரதிநிதிகள் சீனா செல்கின்றனர். 30 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், சீன ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவை பலப்படுத்துதல் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான முதலீடுகள் குறித்து கவனம் செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்படவுள்ளன.

மேலும், சீனா இலங்கையில் முன்னெடுத்துள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் இந்த விஜயத்தின்போது பேச்சுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக சீனாவினால் முன்னெடுக்கப்படும் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பாகவும் இரண்டு நாடுகளுக்கிடையில் முக்கிய பேச்சு நடத்தப்படவுள்ளது.

தற்போதைய நிலைமையில் கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் மீளாய்வுகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் அறிக்கையின் பின்னரே இந்தத் திட்டத்தைத் தொடர்வதா? அல்லது நிறுத்துவதா? என்ற விடயம் தீர்மானிக்கப்படும்.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு செல்லும்போது கொழும்பு துறைமுக நகர் அபிவிருத்தி திட்ட மீளாய்வு அறிக்கை தயாராகிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, மார்ச் மாதம் 30ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினர் அங்கிருந்தவாறு பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

பாகிஸ்தானிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் அந்நாட்டு பிரதமர் உள்ளிட்ட தரப்பினரை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

0 Responses to மைத்திரிபால சிறிசேன மார்ச் 26ஆம் திகதி சீனா பயணம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com