தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவில் தன்னை இணைக்குமாறு கடற்படை லெப்ரினன் யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருப்பதாக பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யோசித்த ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த முறைபாடுகள் தொடர்பாக கடற்படையினர் ஏற்கனவே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யோசித்த ராஜபக்ஷ எவ்வாறு கடற்படையில் இணைந்துக்கொண்டார் என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ருவான் விஜேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் இணைக்கவும்; மகன் யோசித்த ராஜபக்ஷ வேண்டுகோள்!