மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை விட தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிக மோசமான நிகழ்ச்சி நிரலோடு தமிழ் மக்களை சிதறடிக்க முயற்சிக்கின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கொடும்பாவி எரிப்புக்கு பின்னால் ஒரு நிகழ்ச்சி நிரல் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தை விட தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் தமிழ் இனத்தை சிதறடிக்க செய்வதற்கான காரியங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை, அபிவிருத்தி என்ற மாயைக்குள் தமிழ் இனத்தை அழிப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே அவதானமாக இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மஹிந்தவை விட தமிழர்களை சிதறடிக்கும் மோசமான திட்டங்களும் ரணில் செயற்படுகின்றார்: சிறிதரன்