பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கக் கூடிய வெஸ்ட் மினிஸ்டர்முறை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற முறையை ஒத்த முறையொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாளை வியாழக்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆராய இருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தாங்கள் செய்த இலஞ்ச ஊழல் மோசடிகள் அம்பலமாகும் என்ற பயத்தில் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி தேசிய அரசாங்கத்தின் பயணத்தை நிறுத்த முயல்வதாகவும் பிரதமர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தேசிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டம் குறித்து பிக்குமார்களை அறிவூட்டும் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இது மக்கள் உருவாக்கிய மக்களின் அரசாங்கமாகும். இவ்வளவு காலமும் இருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி நல்லாட்சியை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும். தற்பொழுது இருப்பது வெளிப்படையான சமூக அமைப்பாகும். இன்று குடும்ப ஆட்சி கிடையாது. குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள மாளிகைகளுக்கு என்ன செய்வது என தீர்மானிக்க வேண்டியுள்ளது. செல்லுமிடமெல்லாம் மாளிகைகள் இருக்கின்றன. அன்றிருந்த அரச ஆட்சிக்கு முடிவு காணப்பட்டுள்ளது. நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்தி அடுத்த தேர்தலின் பின்னர் சகலரும் இணைந்து தேசிய அரசாங்கமொன்றை உருவாக்க முடியும். ஆனால் சிலர் இதனை விரும்பவில்லை. தேசிய அரசாங்கம் உருவானால் தங்களுக்கு என்ன நடக்கும் என பயப்படுகின்றனர்.
தாங்கள் செய்த மோசடி அம்பலமாகுமா? இலஞ்சம் வெளியில் வருமா எமக்கெதிராக வழக்கு தொடரப்படுமா? எங்களை சிறையில் அடைப்பார்களா? என்ற அச்சத்தில் சிலர் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி இந்த பயணத்தை நிறுத்த முயல்கிறார்கள். இதற்கு நாம் தலைசாய்க்கப் போவதில்லை.
இனவாதத்தை ஓரங்கட்டி நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக சகலரதும் ஒத்துழைப்பைப் பெறும் மாநாடொன்றை அடுத்த மாதம் நடத்த இருக்கிறோம். 100 நாள் திட்டத்தின் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதே எமது திட்டமாகும். இதற்காக 24 மணித்தியாலத்துடன் மேலும் ஒரு மணித்தியாலத்தை இணைக்க வேண்டியிருக்கும்.
கடந்த அரசாங்கம் ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்கள் எத்தனையென இன்னும் எங்களுக்கு தெரியாதுள்ளது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை கணனி மயப்படுத்தி வருகிறோம். திட்டங்கள் எதுவுமின்றியே நாட்டை ஆட்சி செய்திருக்கிறார்கள். பில்லியன் கணக்கில் பணம் வீண்விரயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தேவையான இடங்களில் பணம் செலவிடப்படவில்லை.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் 53 அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் எவ்வாறு இலஞ்சம் பெற்றவர்களை பிடிக்க முடியும்? தேசிய உரிமை குறித்து பேசினாலும் தொல்பொருள் திணைக்களத்தில் பல வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தேவையான துறைகளில் அளவுக்கதிகமாக நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனங்கள் எத்தனை என ஜனாதிபதிக்கு கூட இன்னும் தெரியாது. வாகன இறக்குமதி செய்யும் முகவர்களினூடாகத்தான் ஜனாதிபதி செயலக வாகனங்கள் குறித்து தகவல் திரட்ட வேண்டியுள்ளது. கடந்த வருடம் ஜனாதிபதி செயலகத்திற்கும் பிரதமர் அலுவலகத்திற்கும் எத்தனை வாகனம் தருவிக்கப்பட்டதென அவர்களினூடாகத் தான் அறிந்து கொள்கிறோம். வாகனங்கள் குறித்த புதிவுகள் எதுவும் கிடையாது.
புத்த சாசனத்தை பாதுகாக்கக் கூடிய பிக்குமார்களுடன் இணைந்து நாம் செயற்பட தயாராக இருக்கிறோம். ஏனைய மதத் தலைவர்களுடனும் பேசுவோம். தேசிய பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச இருக்கிறோம். நாம் எடுத்த நடவடிக்கைகளினால் நாம் கேட்காமலே சர்வதேச சமூகமும் மனித உரிமை பேரவையும் விசாரணை அறிக்கையை செப்டம்பர் வரை பின்போட்டுள்ளது.
2009 மே மாதம் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரமே இலங்கைக்கு எதிரான விசாரணை ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்காவோ இந்தியாவோ சீனாவோ மேலைத்தேய நாடுகளோ அன்றி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமே முன் வைத்தது. இதனால் ஏற்பட்ட குழப்பத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக தீர்த்து வருகிறோம். இந்த சிக்கல்களை தீர்த்து நாட்டின் எதிகாலத்தை சுபீட்சமாக்க வேண்டும்.
அரசியலமைப்பை திருத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்போது வெஸ்ட் மினிஸ்டர் முறையையும் ஐரோப்பிய பாராளுமன்ற முறையையும் கனத்திற்கொண்டு இவற்றை ஒத்த முறையொன்றிற்கு எமது பாராளுமன்றத்தை செயற்படுத்தும். ஜனநாயக முறையொன்றை தயாரிக்க முடியும். அரசியலமைப்பு திருத்தம் குறித்து வியாழக்கிழமை சுதந்திரக் கட்சியுடன் பேச்சு நடத்தப்படும்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் நாளை பேச்சு: ரணில்