Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் இரண்டு நாட்களில் இணையத் தளத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

முன்பு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் தேர்வு முடிவுகள் வெளியாக கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் ஆகும். ஆனால் இப்போது புதிய முறையை கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதன்படி தேர்வு எழுதி இரண்டு நாட்களில் அரசு இணையத் தளத்தில் திருத்திய விடைத்தாள்கள் வெளியிடும் என்று தெரிய வருகிறது.இதில் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிப்பவர்கள், மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்பவர்கள் பதிவிறக்கம் செய்து பயனடைவார்கள் என்றும் அத்துறை தெரிவித்துள்ளது.

விடைத் தாள்கள் வெளியாகி கூடிய விரைவில் மார்க்ஷீட்டும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.இந்த வருடம் 8 லட்சத்து 43 ஆயிரத்து 651 பேர் 12ம், வகுப்புத தேர்வு எழுதுகிறார்கள் என்றும், 10 லட்சத்து 72 ஆயிரத்து 611பேர் 10ம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to பத்து மற்றும் பன்னிரண்டு வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் இணையத் தளத்தில்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com