அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாக ஆதாரங்களுடன் வழக்குத் தொடர்வது குறித்து ஆலோசனை: இளங்கோவன் பேட்டி.
மாநில அமைச்சர்களின் ஊழல்களை ஆதாரங்களுடன் பட்டியலிட்டு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
ஓட்டுநர்கள் பணி நியமனம் தொடர்பாக அமைச்சர் மிரட்டியதால் நெல்லை வேளாண்மைத்துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை செய்துகொண்டார். விருதுநகர் நகராட்சி வளர்ச்சிக்காக 27 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டு ஒரு வருடம் ஆகியும், இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. 12 சதவிகித கமிசன் தந்தால்தான் நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.
இதுபோன்ற ஊழல்களால் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற பணம் இல்லாமல், ஊராட்சித் தலைவர்கள் தத்தளிக்கின்றனர். இங்கே இருக்கின்ற அமைச்சர்களெல்லாம் எவ்வளவுக்கு எவ்வளவு கொள்ளை அடிக்க முடியுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு கொள்ளை அடித்துள்ளனர். ஒவ்வொரு அமைச்சரைப் பற்றியும் விரைவில் பட்டியலிட்டு, நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர முடியுமா என்பது பற்றி வழக்கறிஞர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மின்தடையை போக்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த அதிமுக, அதனை போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெட்ரோலிய அமைச்சகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டதற்கு பொறுப்பேற்று பிரதமரும், அத்துறையைச் சேர்ந்த அமைச்சரும் பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறினார்.

0 Responses to அதிமுக அமைச்சர்களின் ஊழல்! இளங்கோவன் பேட்டி (காணொளி இணைப்பு)