இலங்கை மீனவர்களுக்கும், இந்திய (தமிழக) மீனவர்களுக்கும் இடையே எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தையை பிற்போடுமாறு இலங்கை அரசு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் நிமால் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அரசின் 100 நாள் வேலைத்திட்ட முன்னெடுப்புகள் மற்றும் பேச்சு வார்த்தைக்காக செல்லும் மீனவர் பிரதிநிதிகளுடனான சந்திப்பு என்பனவற்றை உடனடியாக செய்து முடிக்க கால அவகாசம் தேவை. எனவே இந்த பேச்சுவார்த்தையை தற்காலிகமாக பிற்போடுமாறும் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இலங்கை இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 27.01.2014 அன்று சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழக இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் முதற்கட்டப் பேச்சுவார்த்தையும், 12.05.2014 அன்று கொழும்பில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
இந்த இரண்டு கட்டப் பேச்சுவார்த்தையிலும், தமிழக விசைப்படகு தடை செய்யப்பட்ட இரட்டை மடி, ரோலர் மடி, சுருக்கு மடி மீன்பிடி முறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஆனால், இந்த மீன்பிடி முறைகளை மாற்றிக்கொள்ள மூன்று வருட காலம் அவகாசம் தேவை எனவும், பதிலாக இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்வதாகவும் தமிழக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் இலங்கையில் நடைபெற்ற 30 ஆண்டுகால உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களின் கடல் வளங்களை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து வாழ்வாதாரத்தை அழித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.
அதேசமயம் பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில் தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக்கூடாது எனவும் தமிழக மீனவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதனால் இரண்டு கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகளிலும் சுமுக உடன்பாட்டினை எட்ட முடியாமல் போனது.
இலங்கையில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிருக்கும் சூழலில் இந்திய, இலங்கை அரசுகள் மூன்றாம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தைகள் நடத்த முயற்சிகள் எடுத்தன. அதனைத் தொடர்ந்து சென்னையில் மார்ச் 05 அன்று மூன்றாம் கட்ட மீனவப் பேச்சுவார்த்தை நடைபெறும் என தமிழக மீன் வளத்துறை செயலர் விஜயக்குமார் அறிவித்தார்.
இந்நிலையில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் துலிப் வெதாரச்சி திங்கட்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,“வாரத்திற்கு மூன்று நாட்கள் என ஆண்டுக்கு 120 நாட்கள் வீதம் இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் அனுமதி கோரியுள்ளனர். ஆனால் இது குறித்து இலங்கை மீனவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானிக்க வேண்டும்” என்றுள்ளார்.

0 Responses to தொடரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; பேச்சுவார்த்தை மீண்டும் ஒத்திவைப்பு?