Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை!

பதிந்தவர்: தம்பியன் 11 February 2015

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் இறுதி நாட்களில் சுகாதார அமைச்சராக பதவி வகித்தவரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்கவை பிணையில் செல்ல கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் (இன்று புதன்கிழமை) உத்தரவிட்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கடந்த 02ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார்.

அப்போது அவரை 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பிணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com