இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளில் எந்தவித தளர்வும் ஏற்படுத்தப்படக் கூடாது. மாறாக, வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.
இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை வரும் அமெரிக்காவின் தெற்கு, மத்திய கிழக்கு ஆசியாவுக்கான உதவி இராஜாங்க செயலர் நிஸா தேசாய் பிஸ்வாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தித்துப் பேசுமென்றும், அதன்போதே மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீதான ஐக்கிய நாடுகளின் விசாரணைகளை வலுப்படுத்தல், அரசியல் கைதிகளில் விடுதலை, வடக்கு- கிழக்கின் மீள் குடியேற்றம், காணாமற்போனோரை கண்டறிதல் உள்ளிட்ட நான்கு விடயங்கள் தொடர்பில் அமெரிக்கப் பிரதிநிதியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துக் கூறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to இலங்கை மீதான ஐ.நா. விசாரணைகளை வலுப்படுத்துமாறு த.தே.கூ கோரும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்