Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டுக்கு எதிராக சதிச்செயலில் ஈடுபட்டமை, பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீற முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரதம நீதியரசர் கே.சிறிபவன், மற்றும் நீதியரசர்களான பிரியசாத் டெப், ஈவ வனசுந்தர தலைமையிலான நீதியரசர்களடங்கிய குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் 25 மாவட்டங்களிலும் இராணுவ படைகளை குவித்து குழப்ப நிலையை உருவாக்க முனைந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் சாசனத்தின் படி அடிப்படை உரிமை மீறல் செயற்பாடாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to நாட்டுக்கு எதிரான சதிச்செயல் குற்றச்சாட்டு; மஹிந்தவுக்கு உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com