Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை இராணுவத்தின் 21வது இராணுவத் தளபதியாக லெப்ரினன் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் தரத்திலிருந்த கிரிசாந்த டி சில்வா, லெப்ரினன் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

முப்படைகளின் தளபதியும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் அவருக்கான நியமனக்கடிதம் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

முன்னாள் இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் தயா ரத்னாயக்க எதிர்வரும் 22ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகின்றார். புதிய இராணுவத் தளபதி 22ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வார்.

0 Responses to புதிய இராணுவத் தளபதியாக கிரிசாந்த டி சில்வா நியமனம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com