Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவி ஏற்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி அபார வெற்றி பெற்று, டெல்லியில் தனித்து ஆட்சியமைக்க உள்ளது. வருகிற 14ம் திகதி டெல்லி ராம் லீலா மைதானத்தில் கெஜ்ரிவால் முதல்வராகப் பதவி ஏற்கத் தேவையான ஏற்பாடுகள் மிகத் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அர்விந்த் கெஜ்ரிவால் பிரதமரை சந்தித்து, தமது பதவி ஏற்பு விழாவுக்கு அழைப்பு விடுத்ததாகவும், பிரதமர் அன்றைய தினம் மும்பை  செல்ல இருப்பதால் கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டு கெஜ்ரிவால் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிய வருகிறது.

மேலும்,கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவையின் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளவர்களின் பெயர்களை பட்டியலிட்டு, டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் கொடுத்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது. டெல்லி துணை முதல்வராக அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த இடத்தில் உள்ள மனீஷ் சிஸொரியா இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செயலரிடம் தேர்தல் அறிக்கையை நிறைவேற்றுவது குறித்த அறிக்கையைத் தயார் செய்து தரும்படி கெஜ்ரிவால் உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்க மாட்டார்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com