Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 23 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் சீர்திருத்த ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

 டெல்லி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 23 பேர் மீதும், ஒரு பாஜக எம்எல்ஏ மீதும் குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் சீர்திருத்த ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மியின் 67 எம்எல்ஏக்களில் 44 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், இவர்களின் சொத்து மதிப்பு என்பது தற்போது 6 முதல் 10 கோடி ரூபாயாக இருக்கிறது என்றும் தேர்தல் சீர்திருத்த ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

குற்றப்பின்னணி என்பது எத்தகையது என்றும், எம்எல்ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பதுக் குறித்தும் தேர்தல் சீர்திருத்த ஆணையம் ஆராய்ந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இதனால் இவர்களின் பதவிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com