Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை வெளிவிவகார அமைச்சரான மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தின் போது அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை வந்துள்ள அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஸா தேசாய் பிஸ்வாலுக்கும், மங்கள சமரவீரவுக்கும் இடையில் இன்று காலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்பின்னர் இருவரும் இணைந்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தனர். இதன்போதே மங்கள சமரவீரவின் அமெரிக்க விஜயம் தொடர்பிலும் அறிவிக்கப்பட்டது.

அத்தோடு, அங்கு கருத்துரைத்த நிஸா தேசாய் பிஸ்வால், “இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகள் மற்றும் நல்லாட்சி கட்டமைப்புக்களை ஏற்படுத்த அமெரிக்கா உதவும். தொடர்ந்து பங்குதாரராக இருக்கவே அமெரிக்கா விரும்புகிறது” என்றுள்ளார்.

0 Responses to மங்கள சமரவீர அடுத்த வாரம் அமெரிக்கா விஜயம்; ஜோன் கெரியை சந்தித்துப் பேசுவார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com