Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்ட லக்விக்கு மேலும் 30 நாட்கள் சிறைத் தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 மும்பைத் தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் லக்விக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. ஆனால் அடுத்த நாளே பாகிஸ்தான் அரசு அவரை வேறு ஒரு வழக்கில் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவர் பல்வேறு நீதி மன்றங்களில் ஜாமீன் தாக்கல் செய்தும் அத்தனை நீதிமன்றங்களும் லக்வியின் ஜாமீன் மனுக்களை ரத்து செய்தன.

இந்நிலையில் லக்வி சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.பாகிஸ்தான் உச்ச நீதிமன்றமும் லக்வியின் காவலை மேலும் 30 நாட்கள் நீட்டித்து உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

0 Responses to லக்விக்கு மேலும் முப்பது நாட்கள் சிறை: பாகிஸ்தான் நீதிமன்றம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com