Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எங்களது நிறுவனங்களுக்கு சொந்தமான எந்த அலுவலகக் கிளைகளிலும் சோதனை செய்யப்பட்டவில்லை என்று பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி கூறியுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் எரிசக்தித் துறை ஆவணங்கள் களவு போயின. இந்த குற்றச்சாட்டில் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் பட்ஜெட் குறித்த அறிக்கைத் தயாரிக்கப்பட்ட அந்த எரிசக்தித் துறை ஆவணங்களை திருடி, 4 தனியார் நிறுவனங்களுக்கு விற்றதாகத் தெரிய வந்தது. இதில் அனில் அம்பானிக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமும் ஒன்று என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அனில் அம்பாணிக்கு சொந்தமான அலுவலகம் ஒன்றில் போலீசார் சோதனை நடத்தினர் என்று தகவல் வெளியானது. இதை முழுவதுமாக மறுத்துள்ள அனில், போலீசார் எந்த நேரமும் சோதனையிட வேண்டும் என்று கேட்டால் முழு ஒத்துழைப்பும் தரத் தயார் என்று கூறியுள்ளார்.

0 Responses to எங்களது எந்த அலுவலகங்களிலும் சோதனை செய்யப்படவில்லை: அனில் அம்பாணி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com