Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் இணைந்து கொண்டு சுகாதார அமைச்சராக பதவி வகித்தவருமான திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை, கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் வைத்து இரகசியப் பொலிஸார் சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) கைது செய்துள்ளதாகவும், அவர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது என்று போலி ஆவணமொன்றை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார்.

0 Responses to முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com