Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ரணை பற்­றிய விவா­தங்கள் இப்­போது சூடு­பி­டித்­துள்­ளன.  இந்­த ­வாரம் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, அமெ­ரிக்­கா­வுக்கு மேற்­கொள்­ள­வுள்ள பய­ணத்தை அடுத்து, இன்­னமும், முனைப்­ப­டையும் வாய்ப்­புகள் உள்­ளன.

உள்­நாட்டுப் போர்க்­குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுப்­பதில், கூடு­த­லான அக்­கறை செலுத்தி வரு­ப­வர்­களில் முக்­கி­ய­மா­னவர் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர தான்.

விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரின் இறு­திக்­கட்­டத்தில், படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க்­குற்­றங்கள் குறித்த ஐ.நாவின் சர்­வ­தேச விசா­ர­ணையைத் தவிர்க்க வேண்­டு­மானால், உள்­நாட்டு விசா­ர­ணையை உட­ன­டி­யாகத் தொடங்­கு­வது மட்டும் தான் இப்­போ­துள்ள ஒரே வழி என்று அவர் தெளி­வா­கவே கூறி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்­தவர் என்ற வகை­யிலும், லக் ஷ்மன் கதிர்­கா­மரின் வழியில், சென்று சர்­வ­தேச சமூ­கத்தை கைக்குள் போட்டுக் கொள்ளும் உத்­தியைக் கையாள்­பவர் என்ற வகை­யிலும், மங்­கள சம­ர­வீ­ரவின் இந்த திட்­டத்தை குறைத்து மதிப்­பிட்டு விட முடி­யாது.

வெளி­வி­வ­கார அமைச்சை எல்லா வகை­யிலும் லக் ஷ்மன் கதிர்­காமர் காலத்து நிலை­மைக்கு கொண்டு வரு­வதே மங்­கள சம­ர­வீ­ரவின் கனவு.

லக்ஸ்மன் கதிர்­காமர் தான் விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச சூழலை உரு­வாக்­கி­யவர்.

சர்­வ­தேச அளவில் விடு­தலைப் புலி­களை தடை செய்­வ­தற்­கான முயற்­சி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டவர். அவ­ரது அணு­கு­மு­றைகள், சந்­தி­ரிகா அர­சாங்­கத்­துக்குப் பெரிதும் கைகொ­டுத்­தி­ருந்­தன.

ஆனால், போர் அரங்கில் விடு­தலைப் புலிகள் பெற்­றி­ருந்த மேலா­திக்கம் தான், அப்­போது சந்­தி­ரிகா அர­சாங்­கத்­துக்கு கிடைத்­தி­ருந்த சர்­வ­தேச ஆத­ரவை வைத்துக் கொண்டு போரில் வெற்­றியைப் பெறு­வ­தற்குத் தடை­யாக இருந்­தது.

இப்­போது, லக் ஷ்மன் கதிர்­காமர் எதிர்­கொண்­ட­ள­வுக்கு நெருக்­க­டியை மங்­கள சம­ர­வீர எதிர்­கொள்ள வேண்­டிய நிலை இல்­லா­விட்­டாலும், போர்க்­குற்ற விசா­ரணை விவ­கா­ரத்தில், மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு முக்­கி­ய­மான சவால் காத்­தி­ருக்­கி­றது என்­பதில் ஐய­மில்லை.

இருந்­தாலும், இலங்­கையின் புதிய அர­சாங்­கத்தைப் பாது­காக்க வேண்டும் என்ற நோக்­கமும், இலங்­கையில் அமெ­ரிக்க நலனைப் பாது­காக்கும் அர­சாங்­கத்தை தக்­க­வைக்க வேண்டும் என்ற நோக்­கமும் அமெ­ரிக்­கா­விடம் இருப்­பது. இலங்­கைக்குக் கிடைத்­துள்ள அரிய சந்­தர்ப்­ப­மாகும்.

முன்­னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்­கத்தை சர்­வ­தேச அரங்கில் பாது­காப்­ப­தற்கு சீனா எந்­த­ள­வுக்கு ஈடு­பாடு காட்­டி­யதோ, அதே அள­வுக்கு இப்­போ­தைய அர­சாங்­கத்தைப் பாது­காப்­பதில் அமெ­ரிக்கா ஈடு­பாடு காட்டும் சூழல் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.

இது­போன்­ற­தொரு வாய்ப்­பான சூழல் லக் ஷ்மன் கதிர்­கா­ம­ருக்கு கிடைத்­தி­ருக்­க­வில்லை.  முன்­னைய வெளி­வி­வ­கார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்கும் கிடைத்­தி­ருக்­க­வில்லை. எனவே, மங்­கள சம­ர­வீ­ர­வுக்கு இலங்­கையின் வெளி­வி­வ­காரக் கொள்­கையை லக் ஷ்மன் கதிர்­கா­மரின் காலத்­துக்கு கொண்டு செல்­வதில் அவ்­வ­ளவு சிக்­கல்கள் எழாது.

ஆனாலும், சர்­வ­தேச போர்க்­குற்ற விசா­ரணை விவ­கா­ரத்தில் மங்­கள சம­ர­வீர அமெ­ரிக்­காவே எல்­லா­வற்­றையும் கையாளும் என்று அமை­தி­யாக இருந்து விட முடி­யாது. ஏனென்றால் அதற்­கான கால­கட்டம் கடந்து விட்­டது.

இலங்­கையில் நடந்த போர்க்­குற்­றங்கள் குறித்து விசா­ரணை நடத்­து­வ­தற்கு கொடுக்­கப்­பட்ட கால­அ­வ­கா­சத்தை முன்­னைய மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் பயன்­ப­டுத்திக் கொள்­ள­வில்லை.

இதனால், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்­திடம் இதற்­கான விசா­ர­ணையை நடத்தும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்­பட்டு, அந்த விசா­ர­ணைகள் முடிவுக் கட்­டத்தை எட்­டியும் விட்­டன.

எனவே, இலங்­கையில் நடந்த போர்க்­குற்ற விசா­ர­ணை­களைக் கண்டும் காணா­தது போன்று அமெ­ரிக்­கா­வினால் திடீ­ரெனக் கைவிட்டு விட­மு­டி­யாது.

ஏனென்றால், அமெ­ரிக்கா தான் இந்த விசா­ர­ணை­களை நடத்த வேண்டும், போர்க்­குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­றப்­பட வேண்டும், நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று வலி­யு­றுத்­திய முதல் நாடு.

ஜெனீவாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்து நிறை­வேற்­று­வதில் முக்­கி­ய­மா­கவும் முதன்­மை­யா­கவும் பணி­யாற்­றி­யது அமெ­ரிக்கா தான்.

எனவே, இலங்­கையில் ஆட்­சி­மாற்றம் ஏற்­பட்டு விட்­டது என்ற கார­ணத்தை முன்­வைத்து, திடீ­ரென போர்க்­குற்ற விசா­ரணை விவ­கா­ரத்தை அமெ­ரிக்கா தொப்­பென்று கைவிட்டு விட முடி­யாது.

ஒரு கால­அ­வ­கா­சத்தைக் கொடுக்­கலாம், இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தை கொஞ்சம் பின் தள்­ளி­வைக்க உத­வலாம். அதையே தான் இப்­போது அமெ­ரிக்கா செய்யத் தயா­ரா­கி­யி­ருக்­கி­றது.

அதே­வேளை, சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்டால், இலங்­கையின் படை அதி­கா­ரி­களும், அர­சி­யல்­வா­தி­களும் சர்­வ­தேச நீதி­மன்ற விசா­ர­ணையை எதிர்நோக்க நேரிடும் என்று கூறி­யி­ருக்கும், மங்­கள சம­ர­வீர அதனைத் தடுப்­ப­தற்கே, உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பிக்க வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கிறார்.

வரும் மார்ச் மாதம் ஜெனீ­வாவில் தொடங்­க­வுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்­ன­தாக, உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை ஆரம்­பிப்­பதன் மூலம், சர்­வ­தேச விசா­ர­ணையின் அடுத்த கட்­டத்­துக்கு முட்­டுக்­கட்டை போடலாம் என்று மங்­கள சம­ர­வீர எதிர்­பார்க்­கிறார்.

அமெ­ரிக்­காவின் தற்­போ­தைய நிலைப்­பாடு மற்றும், உள்­நாட்டு விசா­ரணை குறித்த இலங்கை அர­சாங்­கத்தின் நிலைப்­பாடு என்­ப­ன­வற்றை அடிப்­ப­டை­யாக வைத்துப் பார்க்கும் போது, ஜெனீவாவில் இலங்­கைக்கு எதி­ரான நகர்­வுகள் திடீர் முடக்க நிலையை அடையும் சாத்­தி­யங்­களை அதி­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

சர்­வ­தேச விசா­ரணை என்­பது தமி­ழர்­களின் நீண்­டநாள் வலி­யு­றுத்­த­லாக இருந்து வந்­தது.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் விசா­ரணை, முழு அளவில் இல்­லா­வி­டினும், ஓர­ள­வுக்­கேனும் தமக்கு நியா­யத்தைப் பெற்றுத் தரும் என்ற எதிர்­பார்ப்பை தமி­ழர்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால், ஜன­வரி 8இற்குப் பிந்­திய அர­சியல் சூழல் இந்த எதிர்­பார்ப்­புகள் நம்­பிக்­கைகள் அனைத்­தை­யுமே பொடிப்­பொ­டியாய் நொறுக்கி விடுமோ என்ற அச்­சத்தை தமிழ்­மக்கள் மத்­தியில் இப்­போது ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

உள்­நாட்டு விசா­ர­ணை­களின் மூலம் நீதி கிடைக்­காது என்ற நிலையில் தான் தமிழ் மக்கள் சர்­வ­தேச விசா­ர­ணையின் மீது நம்­பிக்கை வைத்­தி­ருந்­தனர்.

கடந்த காலங்­களில் தமிழ்­மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியாயம் பெற்றுக் கொடுப்­ப­தாக உள்­நாட்டில் நடத்­தப்­பட்ட விசா­ர­ணைகள் எது­வுமே, அவர்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தவ­றி­யி­ருந்­தன. அதனால் தான் உள்­நாட்டு விசா­ர­ணை­களின் மூலம் தமக்கு நீதி கிடைக்­காது என்று தமிழ்­மக்கள் உறு­தி­யாக நம்­பினர்.

அது­போ­லவே மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் உள்­நாட்டு விசா­ரணை என்று மேற்­கொள்­ளப்­பட்ட அனைத்து விசா­ர­ணை­க­ளுமே, தமிழ்­மக்­களின் அந்த அவ­நம்­பிக்கை சரி­யா­னது என்­பதை நிரூ­பிக்கும் வகை­யி­லேயே அமைந்­தி­ருந்­தன. இதனால், ஐ.நா. நடத்தும் சர்­வ­தேச விசா­ரணை மீது தமிழ் மக்கள் அதி­க­ளவு நம்­பிக்­கையைக் கொண்­டி­ருந்­தனர்.

திடீ­ரென அந்த செயல்­மு­றைகள் முடக்­கப்­பட்டு உள்­நாட்டு விசா­ர­ணைகள் மீண்டும் தொடங்­கப்­ப­டு­வது தமிழ்­மக்­களை மேலும் அவ­நம்­பிக்­கைக்கு உள்­ளாக்கும் நிலை­யையே ஏற்­ப­டுத்தும்.

உள்­நாட்டு விசா­ர­ணை­யாலும், சர்­வ­தேச விசா­ர­ணை­யாலும் எந்தப் பய­னு­மில்லை என்ற கருத்து தமிழ்­மக்­க­ளிடம் மேலோங்கும் நிலை உரு­வா­கலாம்.

ஏற்­க­னவே புதிய உள்­நாட்டு விசா­ரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அதி­ருப்­தியும் ஏமாற்­றமும் வெளி­யிட்­டுள்­ளது.

உள்­நாட்டு விசா­ர­ணைகள் குறித்து தமிழ்­மக்கள் கொள்ளும் சந்­தே­கத்­துக்கு இன்­னொரு கார­ணமும் உள்­ளது.

உள்­நாட்டு விசா­ரணை மூலம் குற்­ற­வா­ளிகள் தண்­டிக்­கப்­ப­டு­வார்­களா? அத்­த­கைய தண்­ட­னைகள் எந்­த­ள­வுக்கு உறு­தி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்ற கேள்வி உள்­ளது. ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­ லப்­பட்ட - விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான போரைத் தலைமை தாங்­கி நடத்­தி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ.

போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக அவரே பதி­ல­ளிக்க வேண்­டி­யவர்.

இப்­போது அவர் அதி­கா­ரத்தில் இல்­லாது போனாலும், இது­கு­றித்து அவ­ரிடம் எந்த விசா­ர­ணையும் நடத்­தவோ, வழக்குத் தாக்கல் செய்­யவோ முடி­யாது.

ஏனென்றால், இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்புச் சட்­டப்­படி, ஜனா­தி­ப­தி­யாக இருந்த காலப் பகு­தியில் அவர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, ஓய்­வு­பெற்ற பின்னர் விசா­ர­ணை­களை நடத்­தவோ தண்­டிக்­கவோ முடி­யாது.

இதனை அடிப்­ப­டை­யாக வைத்து தான், ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு மறுநாள், அதி­கா­லையில் அலரி மாளி­கையில், ஆட்­சியைத் தக்­க­வைக்கும் இரா­ணுவச் சதித்­திட்டம் குறித்து மஹிந்த ராஜ­பக்­ ஷ­விடம் விசா­ரணை நடத்த முடி­யாது என்று அமைச்சர் ஜோன் அமர­துங்க கூறி­யி­ருந்தார்.

இப்­ப­டி­யான நிலையில், உள்­நாட்டு விசா­ர­ணையில், போருக்குப் பொறுப்­பாக இருந்த மஹிந்த ராஜ­பக்­ ஷவிடம் எவ்­வாறு விசா­ரணை நடத்­தப்­படும், அதில் அவர் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்டால் எவ்­வாறு தண்­டிக்­கப்­ப­டுவார்? என்ற கேள்வி இருக்­கி­றது.

அதை­விட, உள்­நாட்டு போர்க்­குற்ற விசா­ரணை நடத்தி, குற்­ற­வா­ளி­யாக காணப்­ப­டு­வோ­ருக்குத் தண்­டனை விதிக்­கலாம் என்றும், பின்னர் சில ஆண்­டு­க­ளி­லேயே அவர்­க­ளுக்கு பொது­மன்­னிப்பு அளித்து விடு­விக்­கலாம் என்றும் யோசனை கூறி­யி­ருக்­கிறார் முன்னாள் பிரதி வெளி­வி­வ­கார அமைச்சர் நியோமல் பெரேரா.

இது மோசமானதொரு ஆலோசனை என்பதில் சந்தேகமில்லை. அதை­விட உல­கத்­தையும் தமிழ்­மக்­க­ளையும் ஏமாற்றும் வகை­யி­லா­னது.

பெயருக்கு ஒரு விசாரணையை நடத்தி, குற்றவாளிகளை தண்டித்து விட்டு பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்கலாம் என்பது, நீதியை வழங்கும் முறையாக எப்படிக் கருத முடியும்.

இது­போன்ற குறுக்­கு­வழித் திட்­டங்­களின் மூலம், உள்­நாட்டு விசா­ர­ணை­களை இப்­போ­தைய அர­சாங்கம் நடத்­தாது என்­ப­தற்கு எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை.

இவ்வாறான நீதிக்கு அப்பாற்பட்ட செயல்களை அரசாங்கம் முன்னெடுப்பதற்கு சர்வதேசம் அனுமதிக்குமேயானால், அது தமிழ்மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாது.

இன்னும் இன்னும் குரோத மனப்­பான்­மையும், அவ­நம்­பிக்­கை­யையும், தான் ஏற்­ப­டுத்தும். அதற்குத் தான் உள்நாட்டு விசாரணை இடமளிக்கப் போகிறது என்றால், அது நிலையான அமைதிக்கான வழிமுறையாக இருக்காது.

சுபத்ரா

0 Responses to உள்நாட்டு விசாரணையை நம்ப முடியுமா? - சுபத்ரா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com