Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக ஆளுனர் ரோசய்யா இன்று ஆந்திராவில் நடைபெறவிருந்த காந்தி சிலை திறப்பு விழா ஒன்றை சர்ச்சைக்குரிய காரணத்தால் புறக்கணித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் சிலகலூரிப்பேட்டை என்ற இடத்தில் அமைக்கப் பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையைத் திறக்குமாறு உள்ளூரைச் சேர்ந்த கண்டசாலா பங்காரு பாபு என்பவரே தமிழக ஆளுனர் ரோசய்யாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் குறித்த அழைப்பிதல் தான் சர்ச்சைக்குரிய விதத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. அதில் ரோசய்யா நிற்பது போலவும் அவர் அருகே உள்ளூர் தெலுங்கு தேச கட்சித் தலைவர்கள் பிரதானமாகவும் இருந்தன. ஆனால் காந்தி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய பாஜக தலைவர்களது படங்கள் ரோசய்யாவின் காலுக்குக் கீழே வருமாறு போடப் பட்டிருந்தன. இதனால் அதிருப்தியடைந்த உள்ளூர் பாஜக தலைவர்கள் இதற்குத் தமது கண்டனங்களைப் பதிவு செய்ததுடன் ரோசய்யாவுக்கும் இது தொடர்பாகக் கடிதம் அனுப்பியிருந்தனர்.

இதனை அடுத்து மத்திய அரசின் கோபத்துக்கு ஆளாக விரும்பாத ரோசய்யா தனது வருகையை ரத்து செய்து விழாவிலும் பங்கேற்க மறுத்து விட்டார். தமிழக ஆளுனர் ரோசய்யாவின் பதவிக்காலம் 2016 ஆம் ஆண்டு முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to மோடியின் புகைப் படம் தொடர்பான சர்ச்சை!:சிலை திறப்பு விழாவைப் புறக்கணித்த ரோசய்யா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com