Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காணாமற்போனோரை மீட்டுத்தரக் கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலுயுறுத்தியும் முல்லைத்தீவில் இன்று ஞாயிற்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்களினால், “மாற்றத்துக்காக வாக்களித்தோம் மாற்றுவீரா எம் வாழ்வை, கண்ணீர் சிந்தும் முகத்தைப் பாரும் காணாமற்போனோரை மீட்டுத் தாரும், புதிய அரசே பதில் கூறு” உள்ளிட்ட கோசங்களை முன்வைக்கப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக காலை 10.00 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதிக்கான மகஜரை மாவட்ட அரசாங்க அதிபரிடம் சேர்ப்பிக்கும் பொருட்டும், வடக்கு மாகாண முதலமைச்சரிடம் சேர்க்கும் பொருட்டும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன் மற்றும் மேரிகமலா குணசீலன் ஆகியோரிடம் காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவுகள் கையளித்தனர்.

0 Responses to கண்ணீர் சிந்தும் முகத்தைப் பாரும் காணாமற்போனோரை மீட்டுத் தாரும்; முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com