இலங்கையில் நடத்தப்படவுள்ள உள்ளக விசாரணைகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் தென்னாபிரிக்காவின் உண்மை கண்டறியும் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகள் போன்று நம்பகத்தன்மையாக நடத்தப்படும் என அமைச்சரவையின் பேச்சாளரும், சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது, “நல்லாட்சியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எமது அரசாங்கம் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போன்று உள்ளக விசாரணைகளை நடத்தவுள்ளதுடன், அவை சர்வதேச தரத்தில் நடத்தப்படும் என்று அரசாங்கம் உறுதிமொழி வழங்கியதால் இலங்கைக்கு எதிரான அறிக்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படுவது பிற்போடப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க இராஜாங்க செயலர் உட்பட ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் ஆகியோரையும் எமது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார். இங்கு ஜோன் எப். கெரி மற்றும் ஐக்கிய நாடுகளின் அமெரிக்காவின் வதிவிட பிரதிநிதி சமந்த பவர் உட்பட அந்நாட்டின் உயர் அதிகாரிகள் பலரை சந்தித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக் கூட்டத்தில் விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் எப். கெரி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ள தாகவும் அமைச்சர் மங்கள அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்வார்.
இலங்கையின் உள்ளூர் விசாரணைகள் தொடர்பில் அமெரிக்கா மட்டுமல்ல பிரித்தானியா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் தமது ஆதரவை வெளியிட்டிருக்கின்றன. இதேவேளை, இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அறிக்கையை தாமதப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு எழுத்து மூலம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் 6 மாதம் தாமதப்படுத்துவதற்கு முடிந்தது என்றும் அமைச்சர் மங்கள அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.” என்றுள்ளார்.

0 Responses to சர்வதேச தரத்தில் உள்ளக விசாரணை; உறுதிமொழியை ஐ.நா. ஏற்றது: ராஜித சேனாரத்ன