நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினரான அவர், கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சநதிப்பின் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் அடிப்படை கொள்கை குறித்து அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றன. எமது கலந்துரையாடல் தொடர்பான விடயங்களை மக்களின் பார்வைக்காக இன்னும் சில தினங்களில் மூன்றுமொழிகளிலும் வெளியிடுவோம். கலந்துரையாடலின் விடயங்களை அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கியுள்ளோம். இதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு வந்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் சிக்கல் இல்லை.” என்றுள்ளார்.

0 Responses to நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பிலான சட்டமூலம் விரைவில்: ஜயம்பதி விக்ரமரத்ன