Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சட்டமன்ற ஜனநாயகம் எங்கே? கருணாநிதி

பதிந்தவர்: ஈழப்பிரியா 22 February 2015

சட்டமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு ஆதரவாக கருத்துக்கள் கூறியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி :- பன்னீர்செல்வம் தலைமையில் இயங்கும் தமிழகச் சட்டப்பேரவை எவ்வாறு செயல்படுகிறது?

கலைஞர் :- அதைத்தான் தமிழகம் நேரடியாகக் கண்டு வருகிறதே! ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினரை “கோமாளி” என்று அவையிலே விமர்சனம் செய்கிறார். கேட்டால் பேரவைத் தலைவரும், அமைச்சரும் அந்த வார்த்தை பயன்படுத்தக் கூடாத வார்த்தை அல்ல, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பதில் கூறுகிறார்கள்.

“கோமாளி” என்ற வார்த்தையைப் பொதுப்படையாகக் கூறுவதற்கும், மற்றொரு உறுப்பினரைக் குறிப்பிட்டுக் கூறுவதற்கும் வேறுபாடு கிடையாதா? அதற்காக வெளியேற்றி விட்டார்கள்.

“கோமாளி” என்று பேசிய உறுப்பினர் எதிர்க்கட்சியிலே இருந்தபோது எப்படியெல்லாம் பேசினார்? அவர் வெளியேற்றப்பட்டபோது, அவைக் காவலர்கள் மீதெல்லாம் தாக்குதல் நடத்திய புகைப்படமே அப்போது வெளிவந்ததே!

தே.மு.தி.க.வைப் பொறுத்தவரையில், எதிர்க் கட்சித் தலைவரை “குடிமகன்” என்று ஆளுங்கட்சி உறுப்பினர் வர்ணித்தால், எதிர்க் கட்சிக்காரர்கள் அதைக் கேட்டுக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா? அதுதான் இந்தச் சட்டமன்றத்தில் நாகரிகமா? பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? ஆளுங்கட்சி உறுப்பினர் இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரை விமர்சனம் செய்தால், இவர்களுடைய தலைவியைப் பற்றி அவர்கள் எதிர்வாதம் செய்ய நேரிடுகிறது. அதை எதிர்த்துக் கேட்டால் வெளியேற்றம்! ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதை வேண்டுமென்றாலும் பேசுவார்கள்; அதை எதிர்க் கட்சிகள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் சட்டமன்ற ஜனநாயகமாம்! இதுதான் இப்போது நடக்கிறது.

இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

0 Responses to சட்டமன்ற ஜனநாயகம் எங்கே? கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com