பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் மாதம் இலங்கை பயணம் மேற்கொள்வார் என்று இலங்கை அதிபர் சிறிசேன தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் சிறிசேன மற்றும் நரேந்திர மோடி இருவரும் டெல்லியில் பத்திரிகை அன்பர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது இந்தியாவும், இலங்கையும் பாரம்பரிய உறவுகளைப் பாதுகாத்து வரும் அண்டை நாடுகள் என்றும், இனியும் இதே போன்ற உறவு முறை தொடரும் என்றும் கூறினார். மேலும், வருகிற மார்ச் மாதம் இந்திய பிரதமர் இலங்கைக்கு வரும்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு இன்னும் பலப்பட்டு இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மோடி பேசுகையில் இரு நாட்டு மீனவர்கள் சந்திப்பு விரைவில் நடைபெறும் என்றும், தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to வருகிற மார்ச் மாதம் இலங்கை செல்லவுள்ளார் மோடி?