கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பெரிய கட்டிடங்களை குறிப்பாக, ஹோட்டல்களை அமைப்பதற்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
காலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பிரதமர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தில் 3 பிரதான திட்டங்கள் உள்ளன. மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து 17 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை செயற்படுத்துதல் மற்றும் கடந்த கால மோசடிகள் குறித்து ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்குதல் என்பனவே அவையகும்.
அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஏனைய கட்சிகளுடன் பேசி வருகிறோம். சுற்றுலாத்துறை மேம்பாடு குறித்து பாரிய சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் கம்பனிகளுடன் பேசி பயனில்லை. சுற்றுலா துறையை மேம்படுத்தி மக்களின் வருமானத்தை அதிகரிப்பது குறித்து சிந்திக்காமல் தமது பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவே ராஜபக்ஷ குடும்பம் செயற்பட்டது.
தெற்கிலுள்ள கடற்கரைகளை பாதுகாக்க வேண்டும். அழகான பல கடற்கரைகள் நாசமடைந்துள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to கடற்கரையை அண்மித்த பிரதேசங்களில் பெரிய கட்டிடங்களை அமைக்க அனுமதியில்லை: ரணில்