Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

கடந்த சனிக்கிழமை டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் பதவி ஏற்றுக்கொண்டார்.அன்றைய தினமே அமைச்சரவைக் கூட்டம் நடைப்பெற இருந்த நிலையில் கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இப்போது அவரது உடல் நிலை தேறிய நிலையில் இன்று அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆம் ஆத்மியின் தேர்தல் அறிக்கைகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் மின் கட்டணத்தைக் குறைப்பது, வீட்டுக்கு வீடு குடிநீர் அளிப்பது, இலவச வைஃபை திட்டம் இவைகளை முதல்கட்டமாக நிறைவேற்றுவதுக் குறித்து அமைச்சரவை கூடி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to டெல்லியில் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com