Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அங்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, உத்திரப்பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்திலும் அங்கங்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில் குஜராத்தில் மட்டும்தான் பன்றிக்காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களும், சிகிச்சைப் பெற்று வருபவர்களும் அதிகம் என்றும் அம்மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மிக மும்முரமாக இறங்கியுள்ள அம்மாநில அரசு தும்மல், மூக்கு சுவாசம் மூலமாக 5 அடி தூரம் வரை அந்த வைரஸ் உயிருடன் இருந்து மற்றவரைத் தாக்கும் பாயம் உள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம் என்று அரசு வலியுறுத்தி உள்ளது.அதோடு அகமதாபாத்தில் மக்கள் வீடுகளை விட்டு அனாவசியமாக வெளியில் வரக்கூடாது என்று 144தடை உத்தரவும் பிரப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

0 Responses to அகமதாபாத்தில் பன்றிக்காய்ச்சல் பரவுவதைத் தடுக்க தடையுத்தரவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com