பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்தைப் பெற்று வெற்றி பெற்றாலும், அனைத்துக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு கூட்டு அரசாங்கமொன்றையே அமைக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையப்போவது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கமா அல்லது மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அரசாங்கமா என மக்கள் தன்னிடம் கேட்பதாகக் குறிப்பிட்ட பிரதமர், “அனைத்து கட்சிகளும் இணைந்து மக்களுக்கும் நாட்டுக்கும் சேவை செய்யக்கூடிய வகையில் முன்மாதிரியான அரசியல் முறையொன்றை கட்டியெழுப்புவதே தமது எதிர்பார்ப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைவருக்கும் அதற்கான பொறுப்பு உள்ளதென வலியுறுத்திய பிரதமர், அதனைத் தெளிவுபடுத்திக் கொண்டு அனைவரும் செயற்பட்டால் எமது நாட்டை ஆசியாவின் முன்னோடி நாடாகக் கட்டியெழுப்ப முடியும் என்றும் கூறியுள்ளார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to அனைத்துக் கட்சிகளையும் இணைத்து கூட்டு அரசாங்கம் அமைக்கப்படும்: ரணில்