Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தெரிவித்துள்ளது.

ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதில் காணப்படும் அசமந்தப் போக்கு தேசிய அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடையக் காரணமாக அமையலாம் என்றும் மக்கள் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.

‘அதிகார மாற்றம் மற்றும் மக்கள் சவால்’ என்ற தொனிப்பொருளில் மாத்தளையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to மைத்திரி அரசாங்கம் ஆமை வேகத்தில் செயற்படுகிறது: ஜே.வி.பி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com