இலங்கை அரசாங்கம் நடத்தவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணை ஒருபோதும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கப் போவதில்லை. ஆகவே, அதனை நம்புவதில் பலனில்லை என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் நடைபெற்றது போன்று உண்மைகளைக் கண்டறிந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்ட உள்ளக விசாரணை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகி வருவதாக அரசாங்கத்தின் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரத்ன நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், “உள்ளக விசாரணையொன்று நடத்தப்பட்டால் அது நீதியானதும் நியாயமானதுமாக இருக்கும் என்று கூறமுடியாது. இராணுவத்தை காட்டிக் கொடுக்க மாட்டோம். மஹிந்த ராஜபக்ஷவை காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று கூறுகிறார்கள். நாங்கள் யாரையும் காட்டிக்கொடுக்குமாறு கூறவில்லை.
ஆனால், நியாயமான முறையில் விசாரணைகள் நடத்தப்பட்டால் இவர்கள் குற்றவாளிகலாகலாம் என்பதையே கூறுகிறோம். இதனாலேயே நாம் ஐக்கிய நாடுகள் ஊடக விசாரணை அறிக்கையை கொண்டுவந்தோம். அதுவும் இப்போது செப்டம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் கூறுவது போன்று உள்ளக விசாரணைகள் நடாத்துவதில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதுடன் தமிழ் மக்களுக்கு இதனூடாக நீதி கிடைக்கப்போவதில்லை.” என்றுள்ளார்.

0 Responses to உள்ளக விசாரணையில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்