Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை ஒத்திவைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் தற்போது போராட்டமொன்று நடைபெற்று வருகின்றது.

‘ஐக்கிய நாடுகளின் விசாரணையை நிறுத்த வேண்டாம்; அறிக்கை வெளியிடப்பட வேண்டும், உள்ளக விசாரணைகள் என்பது குற்றவாளிகளையே நீதிபதிகளாக நியமிக்கும் செயல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை விரைவில் பெற்றுக்கொடுக்க வேண்டும்’ உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை 09.00 மணியளவில் போராட்டம் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்களும், காணாமற்போனோரின் உறவினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

0 Responses to குற்றவாளிகளே நீதிபதிகளா?; ஐ.நா. விசாரணை அறிக்கை ஒத்திவைப்பை எதிர்த்து யாழில் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com