Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தம்மை சந்திக்க வரும் திமுக தொண்டர்கள் கட்சிக்கான தேர்தல் நிதியை தருமாறு கோரிக்கை வைத்துள்ளார் கட்சியின் தலைவர் கருணாநிதி.

இன்னும் ஓராண்டில் தமிழக சட்டப்பேரவை நடக்க உள்ள நிலையில், தம்மை சந்திக்க வரும் கட்சித் தொண்டர்கள் கைத்தறி ஆடை, மாலை இவைகளைத் தவிர்த்து அதற்குப் பதில் தேர்தல் செலவுக்கான நிதியைத் தர வேண்டும் என்று தாம் விரும்புவதாகத தெரிவித்துள்ளார் கருணாநிதி.

முன்பெல்லாம் கருணாநிதி பொதுக்கூட்டங்களை நடத்தித் தேர்தல் நிதியை பண முடிச்சாகப் பெற்று வந்தார். இப்போது திடீரென்று இப்படிக் கோரிக்கை வைத்துள்ளார். அவரால் பொதுக்கூட்ட மேடைகளில் பங்கேற்க முடியாது என்றாலும், இவரது பணியை ஸ்டாலினை செய்ய கருணாநிதி கோரிக்கை விடுப்பாரா என்பது இன்னமும் தெரியவில்லை.

0 Responses to திமுக தொண்டர்களிடம் தேர்தல் நிதி கேட்கிறார் கலைஞர் மு.கருணாநிதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com