Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மீனவர்களை கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுமார் 500 மீனவர்கள் கடலுக்கு இன்று காலை மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே சென்ற இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கயிறு கொண்டு வெகுவாகத் தாக்கியதாகத் தெரிய வருகிறது. பின்னர் மீனவர்கள் இருவரும் போட்ட கூச்சலில் மற்ற மீனவர்கள் அருகில் வர, இலங்கை கடற்படையினர் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிய வருகிறது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அனைத்து மீனவர்களும் உடனடியாக கரைத் திரும்பி உள்ளனர்.மோடி இலங்கைக்கு சென்றுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் மீதான இந்தத் தாக்குதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளனர் ராமநாதபுரம் மீனவர்கள்.

0 Responses to கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com