Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ், இடது சாரி உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

கடந்த வருடம் டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சமீபத்தில் கால் டாக்சி ஓட்டுனரால் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான பெண், தமது வேதனையையும்,, மன உளைச்சளையும் குறித்து விரிவாகக் கூறி இருந்தார். இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. எனினும் இரண்டு பெண்கள் அடுத்தடுத்து பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டதுக் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது என் என்றும், காவலர்கள் மீது தமது அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணை நடத்தாதது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டெல்லி காவல் நிலையத்தில் இரு பெண்கள் பாலியல் பலாத்காரம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைப்பெற்று வருவதுக் குறிப்பிடத்தக்கது.

0 Responses to டெல்லியில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டும் ராஜ்நாத் சிங் மவுனம் காப்பது ஏன்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com