Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரண்யா தாய், தந்தையர் அற்ற ஏழைச் சிறுமி என்பதால் காடையர்கள் பலரால் பாலியல் வன்கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த பின்னும், சிறுமிக்காக நீதி வேண்டிக் குரல் கொடுக்க இலங்கையின் பெண்கள், சிறுவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் தன்னார்வ அமைப்புக்கள், நிறுவனங்கள் எவையுமே எட்டிக்கூடப் பார்க்கவில்லை! ஏழைகளின் நிலை இதுதான்.

கனகராயன்குளம் மன்னகுளத்தைச் சேர்ந்த 15 வயதுச் சிறுமி செல்வராசா சரண்யாவைப் பாலியல் வன்கொடுமைப்படுத்தி சிறுமியின் மரணத்திற்குக் காரணமான குற்றவாளிகளைப் பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும்

சிறுமி, தாய் தந்தையர் அற்றவர் என்பதாலும் சிறுமியின் குடும்பம் ஏழ்மைக் குடும்பம் என்பதாலும் சிறுமியின் மரணத்திற்குக் காரணமாவர்கள் இன்னமும் கைது செய்யப்படாது ஏனோதானோ எனப் பொலிஸாரும் உரிய தரப்பினர்களும் செயற்பட்டு வருவதாக ஊரவர்களால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் சிறுவர், பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் எந்தவொரு அமைப்புக்கள்கூட இதுவரைக்கும் சிறுமியின் தூஸ்பிரயோகம் தொடர்பில் கண்டுகொள்ளவில்லை எனக் கூறிக்கவலை தெரிவிக்கப்படுகின்றது.

இப்படியான ஒரு நிலைமை பணபலமும் வசதிவாய்ப்பும் கொண்டவர்களினது குடும்பத்தில் நடைபெற்றிருந்தால் இதுவரைக்கும் ஏனோதானோ என இப்படி விட்டிட்டு இருப்பார்களா?

தாய், தந்தையர் இருவரையும் இழந்த நிலையில் மிகவும் ஏழ்மையான நிலையில் வாழ்வதற்குக்கூட ஒரு வீடற்ற நிலையில் வயதான விபரமற்ற பாட்டியாருடன் வசித்து வந்தவர் என்பதாலேயே சிறுமி இறந்து இன்றைக்கு 14 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் குற்றத்துடன் தொடர்புடையவர்கள் என்னும் சந்தேகத்தில் ஒருர்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை.

சிறுமியின் பாலியல் வன்கொடுமை, அதனால் ஏற்பட்ட மரணத்துடன் தொடர்புடையவர்கள் என உறவினர்களாலும் ஊரவர்களாலும் கிராமத்தின் பொது அமைப்புக்களாலும் சிலரது பெயர்களைச் சுட்டி ஆதாரங்களுடன் இனங்காட்டப்படுகின்றபோதிலும் அவர்களைக் கைதுசெய்து விசாரிக்காது பொலிசார் பக்கச் சார்பாகச் செயற்படுவதாகவும் ஊர் மக்களையும் ஊர் பொது அமைப்புக்களையும் பொலிசார் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகின்றது.

இலங்கையில் பெண்கள் சிறுவர் உரிமைகளுக்காக் குரல்கொடுக்கும் பொது அமைப்புக்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்கூட தாய், தந்தையர் அற்ற ஏழைச் சிறுமி செல்வராசா சரண்யாவின் பாலியல் வன்கொடுமைக் குற்றவாழிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த முன்வரவில்லை எனவும் ஏழைகளுக்கு உதவமாட்டார்கள் என்றும் கூறிக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமி செல்வராசா சரண்யா தனது பாட்டியாருடன் தனது 5 சகோதரச் சிறார்களுடன் நீண்ட காலமாக வாழ்ந்த வீட்டைப் பாருங்கள். இதற்குள்ளதான் சாப்பாடு, படிப்பு என எல்லாமே இதுதான் இலங்கை நாட்டின் ஆசியாவின் அதிசயமாம்

0 Responses to இதுதான் ஏழைகளின் நிலை: குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்த யாரும் முன்வரவில்லை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com