இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆதரங்கள் அடங்கியதாக கூறப்படும் ‘No Fire Zone (யுத்த சூனிய வலயம்)’ எனும் ‘சனல் 4’ தொலைக்காட்சியின் ஆவணப்படத்தின் சிங்கள மொழிப்பிரதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனுடனான சந்திப்பை நேற்று செவ்வாய்க்கிழமை முடித்துக் கொண்டு வெளியே வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஆவணப்படத்தின் இயக்குனரான கெலம் மக்ரேயே குறித்த பிரதியை கையளிக்க முயன்றுள்ளார்.
ஆனாலும், ஜனாதிபதி அதை கவனத்தில் எடுக்காது சென்றுள்ளார். அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார். அமைச்சர் மங்கள சமரவீர, கெலம் மக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார். இதனையடுத்து, அங்கு நின்ற பாதுகாப்பு ஊழியர், கெலம் மக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்கவே அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்.
சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், பிரித்தானியப் பாராளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

0 Responses to ‘யுத்த சூனிய வலயம்' ஆவணப்படத்தின் சிங்கள பிரதியை மைத்திரியிடம் கையளிக்க கெலம் மக்ரே முயற்சி!